Published : 11 Nov 2019 07:32 AM
Last Updated : 11 Nov 2019 07:32 AM

சகோதரர்கள் இல்லாத ‘ஒரு குழந்தை’க்கு உடல் பருமன் பாதிப்பு: புதிய ஆய்வில் தகவல்

வாஷிங்டன்

இல்லாத குழந்தைகளுக்கு உடல் பருமன் பாதிப்பு அதிகம் ஏற்படுவதாக புதிய ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. ‘ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷன் எஜுகேஷன் அண்ட் பிஹேவியர்’ என்றஅமெரிக்க நிறுவனம் ஊட்டசத்து தொடர்பான ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில்,உடன்பிறப்பு இல்லாத குழந்தைகளை‘சிங்கிள்டன்’ என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆரோக்கியமான உணவு பட்டியல்(எச்ஐஇ) என்பது உணவுத் தரத்தின் அளவீடு ஆகும். இதனை ஆரோக்கியமான உணவுகளை மதிப்பிடுவதற்கும் உணவு முறைகளின் மாற்றங்களைக்கண்காணிப்பதற்கும் பயன்படுத்தப்படலாம்.

அதன் அடிப்படையில், வீட்டில் மற்றும்பள்ளிகளில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு குறித்தும், அவர்கள்சிங்கள்டன்னா அல்லது உடன்பிறப்புகள் உள்ளவர்களா என்று தகவல்கள் ஆசிரியர்கள் மற்றும் தாய்மார்களிடம் இருந்து சேகரிக்கப்பட்டது.

இந்த தரவுகள் மூலம் சிங்கள்டன் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு கிடைப்பதில்லை என்பது தெரியவந்துள்ளது. இதனால், சிங்கள்டன் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. அதேபோல், உடன்பிறப்புகள் உள்ளகுழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியமான உணவு கிடைக்க அதிக வாய்ப்பு கிடைக்கிறது. சிங்கள்டன் குழந்தைகளின் தாய், சற்று பருமனாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளதாக ஆய்வு அறிக்கை கூறுகிறது. இதன்மூலம், அவர்களின் குழந்தைகளும் பருமனாக வர வாய்ப்பு உள்ளது.

பள்ளிகளில் குழந்தைகள் சாப்பிடும் உணவுக்கும் வீட்டில் சாப்பிடும் உணவுக்கும் தொடர்பு இல்லை.

ஏனென்றால், சிங்கள்டன் குழந்தைகள் வீட்டில் இருக்கும்போது, டிவி முன்னால் தாயுடன் அமர்ந்துக் கொண்டு ஆரோக்கியம் இல்லாத உணவுகளை அதிகளவில் சாப்பிடுகிறார்கள் என்று அறிக்கை கூறுகிறது.

இதனை சரிசெய்ய குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு பொருத்தமான ஊட்டச்சத்து கல்வியை கருத்தில் கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களை நடைமுறை படுத்துவதன் மூலம் சிங்கள்டன் மற்றும் எல்லா குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகள் கிடைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x