

ராஜ்கோட்:
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி, புயலால் பாதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி, நாளை குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் நகரில் நடக்கவுள்ளது. இந்நிலையில் அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள ‘மஹா’ புயல், குஜராத் மாநிலத்தில் நாளை காலை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக அம்மாநிலத்தில் நாளை பலத்த மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே நாளைய தினம் ராஜ்காட்டில் நடக்கவுள்ள டி20 கிரிக்கெட் போட்டி பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.