

புதுடெல்லி
இந்தியக் கப்பல்களில் வரும் ஜனவரி1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை அமல்படுத்தப்படுகிறது.
அதிக எண்ணிக்கையிலான ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்களுக்குத் தடை என்பது இந்தியக் கப்பல்களுக்கு மட்டுமல்ல. இந்திய எல்லைக்குள் வரும் வெளிநாட்டு கப்பல்களுக்கும் பொருந்தும். வரும் 2020-ம் ஆண்டு ஜனவரி2-ம் தேதியில் இருந்து இந்தியக்கடல் எல்லைக்குள் இருக்கும் இந்தியக் கப்பல் மற்றும் வெளிநாட்டு கப்பல்களில் பிளாஸ்டிக்கள் பயன்பாட்டுக்கு கப்பல் இயக்குநரகம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
“இந்தியாவில் எந்தவொரு கப்பல்களிலும் சோதனையின் போதுபிளாஸ்டிக்களை வைத்திருப்பதோ அல்லது பயன்படுத்துவதோ தெரிந்தால் வழக்கு தொடுக்கப்படும். இந்த குற்றம் தொடர்ந்தால் காவல் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ஆணையம் எச்சரித்துள்ளது.
அதேபோல் இந்தியாவுக்குள் நுழையும் வெளிநாட்டு கப்பல்கள் தங்களிடம் வைத்திருக்கும் பிளாஸ்டிக் பொருட்களை இந்தியத் துறைமுகத்தில் கொட்டக் கூடாது என்றுஅறிவித்துள்ளனர். நெகிழிகளை கடலில் எறிவதால் நீர் ஆதாரங்கள்மாசடைவதுடன் மீட்டெடுக்க முடியாதபாதிப்பையும் ஏற்படுத்துகிறது.
கடலில் பிளாஸ்டிக்கின் அளவுஅதிகரித்தால் 2050-ம் ஆண்டுக்குள் மீன்களின் இனப்பெருக்கம் குறையும்என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்-பிடிஐ