

பிர்ஹாம்பூர்
ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் 20 குடும்பங்களுக்கு அங்காடி பொருட்கள் விநியோகம் (ரேஷன்) செய்யக் கூடாது என பஞ்சாயத்து முடிவெடுத்துள்ளது.
பஞ்சாயத்தில் எடுக்கப்பட்ட முடிவில், பொது விநியோக முறையின் கீழ் 20 குடும்பங்களுக்கு அங்காடி பொருட்களை 11 நாட்களாக நிறுத்தி வைத்துள்ளதாக கூறுகிறார் கௌதமி பஞ்சாயத்தைச் சேர்ந்த சுஷாந்த் ஸ்வைன்.
மேலும், “இனி திறந்தவெளியையும் குறிப்பாக சாலையோரத்தை கழிப்பிடமாக பயன்படுத்துபவர்களை கண்டுபிடித்தால் ஒரு மாதம் வரையில் அங்காடி பொருட்கள் வழங்கக் கூடாது என்று பஞ்சாயத்து மூலம் வலியுறுத்தப்படும். இதன் நோக்கம் மக்களுக்கு முறையான கழிப்பிடம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும்” என்றார் சுஷாந்த்.-பிடிஐ