Published : 01 Nov 2019 10:55 AM
Last Updated : 01 Nov 2019 10:55 AM

5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு: தர மதிப்பீட்டு தேர்வாக நடத்தப்படும் தொடக்கக்கல்வி இயக்ககம் அறிவிப்பு

சி.பிரதாப்

சென்னை

இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத் திருத்தங்களின்படி 5, 8-ம் வகுப்புக்கு நடப்பு கல்வியாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும். முதல் 3 ஆண்டுகளுக்கு மட்டும் மாணவர்கள் தேர்ச்சி நிறுத்தி வைக்கப்படாது என்று பள்ளிக் கல்வித் துறை கடந்தஆகஸ்ட் மாதம் அறிவித்தது. எனினும்,தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறை கள் வெளியிடப்படாததால் பல்வேறுகுழப்பங்கள் நிலவின. இந்நிலையில் 5, 8-ம் வகுப்புகளுக்கு முப்பருவக்கல்வி முறையிலேயே பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தொடக்கக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தொடக்கக்கல்வி இயக்குநர் சேதுராமவர்மா, அனைத்து மாவட்ட முதன்மைகல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ளசுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழக பள்ளிக்கல்வியின் பாடத்திட்டத்தை பின்பற்றும் அனைத்து வகைபள்ளிகளிலும் 5, 8-ம் வகுப்பு படிக்கும்மாணவர்களுக்கு இனி கல்வியாண்டு இறுதியில் பொதுத்தேர்வு நடத்தப்படஉள்ளது. இதற்கான வழி காட்டுநெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி மாவட்ட அளவில் முதன்மை கல்வி அதிகாரி தலைமையில் 9 பேர் கொண்ட தேர்வுக்குழு அமைக்கப்படும். இந்தக்குழு 5, 8-ம்பொதுத் தேர்வு தொடர்பான அனைத்துபணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

போக்குவரத்து வசதிபொதுத்தேர்வு எழுதும் 5-ம் வகுப்புமாணவர்களுக்கு ஒரு கிலோமீட்டர் தொலைவிலும், 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 கி.மீட்டர் தொலைவிலும் தேர்வு மையங்களை ஏற்படுத்த வேண்டும். தேவைப்படும் பள்ளிகளில் கூடுதல்தேர்வு மையங்களையும், போக்குவரத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தரலாம். பொதுத் தேர்வு தற்போதுள்ள வளரறி மற்றும் தொகுத்தறி மதிப்பீடு அடிப் படையில் நடத்தப்படும். அதன்படி 5, 8-ம் வகுப்புக்கு கல்வியாண்டு இறுதியில் எழுத்துத்தேர்வு 60 மதிப்பெண்களுக்கு நடைபெறும். மீதமுள்ள 40 மதிப்பெண்கள் கல்வி தொடர்பான வளரறி மதிப்பீடு செயல்பாடுகளுக்கு வழங்கப்படும்.

5-ம் வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் தொடர்பான அடிப்படை கருத்துகள், பயிற்சிகள் மற்றும் கற்றல் விளைவுகளை சோதிக்கும் வகையில் எழுத்துத் தேர்வு நடைபெறும். 8-ம் வகுப்புக்குஅனைத்து பாடங்களுக்கும் முப்பருவஅடிப்படை கருத்துகள் மற்றும் பயிற்சிகளை சோதித்தறியும் வகையில் நடைபெறும். பொதுத் தேர்வு வினாத்தாள் மற்றும் விடைக் குறிப்புகள் தேர்வுத் துறையால் தயாரிக்கப்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனுப் பப்படும். மாவட்ட தேர்வுக்குழு அதை பிரதி எடுத்து பள்ளிகளுக்கு பிரித்து தரவேண்டும்.

இதுதவிர விடைத்தாள்கள் குறுவளமைய அளவிலேயே மதிப்பீடு செய்யப்படும். திருத்தப் பட்ட விடைத்தாள்கள் மற்றும் மாணவர்களின் மதிப்பெண் பட்டியல்களை சம்பந்தபட்ட பள்ளிதலைமையாசிரியர்களிடம் ஒப்படைக்கவேண்டும். தலைமையாசிரியர் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்களை எமிஸ் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வு எப்படி இருக்கும்?இதுகுறித்து தொடக்கக்கல்வி அதிகாரிகள் கூறும்போது, ‘‘முப்பருவக்கல்விமுறை 5, 8-ம் வகுப்புகளுக்கு நீக்கப்படவில்லை. அதற்கு மாறாக ஆண்டின்இறுதியில் நடத்தப்படும் பொதுத்தேர்வு மாணவர்களின் அடிப்படைகற்றல் திறன்களை சோதிக்கும் வகையில் இருக்கும். அடுத்தகட்ட வகுப்புகளுக்கு செல்வதற்கான தர மதிப்பீடு தேர்வாகவே அதை கருத வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x