

சென்னை
தமிழகம் முழுவதும் அனைத்துபள்ளிகளிலும் இன்று (வெள்ளிக்கிழமை) தமிழ்நாடு தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறுசிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மொழிவாரி மாநிலங்கள்ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தமிழகம், கேரளம்,, ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய சென்னைமாகாணம் இருந்தது. மொழிப்போராட்ட தியாகிகள், அரசியல்கட்சித் தலைவர்கள் ஆகியோரின் கோரிக்கைகளின் படி, 1956-ம்ஆண்டு நவம்பர் 1-ம் தேதிஅன்று சென்னை மாகாணத்தில்இருந்து, கர்நாடகம், ஆந்திரம்,கேரளம் ஆகிய மாநிலங்கள் பிரிந்து, தனியாக மொழிவாரிமாநிலங்களாக அறிவிக்கப்பட்டன. தமிழ்நாடு தினம்இந்த நாளை, தமிழ்நாடுதினம் என்று கொண்டாட,தமிழக அரசு முடிவு செய்து இதுதொடர்பான அரசாணையும்அண்மையில் வெளியிடப்பட்டது. அதன்படி ‘தமிழ்நாடு நாள்' இன்றுநவம்பர் 1-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அரசு உத்தரவின்படி, தமிழ்நாடு நாளையொட்டி பள்ளி, கல்லுாரிகளில் இன்று சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு விழிப்புணர்வுநிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, தமிழகம் மற்றும் தமிழின்தொன்மை குறித்து பள்ளிமாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு தலைமைஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.