ஒலிம்பிக் தூதரானார் மேரிகோம்

ஒலிம்பிக் தூதரானார் மேரிகோம்
Updated on
1 min read

புதுடெல்லி:

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் குத்துச்சண்டை பிரிவுக்கான 10 வீரர்களைக் கொண்ட தூதர் குழுவில் மேரி கோம் சேர்க்கப்பட்டுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் குத்துசண்டைப் பிரிவுக்கு 10 பேர் தூதர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோமும் இடம்பெற்றுள்ளார். அவர் ஆசிய பிரிவின் பிரதிநிதியாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 10 முறை உலக குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்தை வென்ற மேரி கோமின் சாதனைகளுக்கு கிடைத்த அங்கீகாரமாக இது பார்க்கப்படுகிறது.

இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள மேரி கோம், “எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாக நான் இதைப் பார்க்கிறேன். இப்பணியில் சிறப்பாக செயல்பட்டு, சக விளையாட்டு வீரர்களுக்கு உதவுவேன்” என்று கூறியுள்ளார். -பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in