

திருவனந்தபுரம்:
கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன் கடந்த தேர்தலில் தர்மடோம் சட்டப்பேரவை தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். இந்த இடம் தென் மாநிலத்தின் பால் கொள்முதல் முனையமாக கருதப்படுகிறது.
இந்தத் தொகுதியில் உள்ள வெங்கட் என்ற கிராமம் ‘உலகளாவிய பால் கிராமம்’ என்ற அந்தஸ்தை பெறவுள்ளதாகவும், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பால்பொருட்கள் தயாரிப்பு, உள்நாட்டு மாடுகளின் இனப்பெருக்கம் போன்ற பல்வேறு திட்டங் கள் உள்ளதாக அமைச்சர் கே.ராஜூ கூறினார்.