

இ.ஜெகநாதன்
சிவகங்கை
ஸ்மார்ட் வகுப்பறைகள், குளு குளு வசதி, வீடியோ மூலம் பாடம் என தனியார் பள்ளிக்கு நிகராக சிவகங்கை அருகே அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது.
சிவகங்கை அருகே பாகனேரி கிராமத்தில் ஓ.இ.ஆர்.எம். அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் பாகனேரி, காடனேரி, அம்மன்பட்டி, நடராஜபுரம், கொட்டாப்பட்டி உள்ளிட்டகிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள்படிக்கின்றனர். 1965-ல் தொடங்கப்
பட்ட இந்தப் பள்ளியில், காலப்போக்கில் மாணவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. கடந்த ஆண்டு தலைமை ஆசிரிய
ராகப் பொறுப்பேற்ற பிரிட்டோ முன்னாள் மாணவர்கள் மற்றும் கிராம மக்களின் பங்களிப்புடன் படிப்படியாக பள்ளியின் வளர்ச்சிக்கு பங்காற்றி, தனியார் பள்ளிக்கு நிகராக இப்பள்ளியை மாற்றியுள்ளார். பழுதான வகுப்பறைகள்சீரமைக்கப்பட்டு மின் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆசிரியர், மாணவர்கள் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும், இரவு நேரங்களில் சமூகவிரோத செயல்களைத் தடுக்கவும் பள்ளி முழுவதும் 8 சிசிடிவி கேமராக்கள்பொருத்தப்பட்டுள்ளன.
மாணவர்களுக்காக ஸ்மார்ட் வகுப்பறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும்வகுப்பறையில் ஏசி அமைக்கப்பட்டுள்ளது. மின் தடை ஏற்படாமல் இருக்கஇன்வெர்ட்டர் வசதி செய்யப்பட்டுள்ளது. வீடியோக்கள் மூலம் பாடம் நடத்த டிவி உள்ளது. வகுப்பறைகளில் ஸ்பீக்கர், தானியங்கி பெல், தேவையான இருக்கை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் ஆசிரியர்களும் நவீன தொழில்நுட் பங்களைப்பயன்படுத்தியே பாடம் நடத்துகின்றனர். இதனால் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயரத் தொடங்கியுள்ளது. தற்போது 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை 200 மாணவர்களும், 18 ஆசிரியர்களும் உள்ளனர். இதுகுறித்து தலைமை ஆசிரியர் பிரிட்டோ கூறியதாவது:
கிராம மக்களின் ஒத்துழைப்போடு பள்ளியை மேம்படுத்தி வருகிறோம். கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு 100 சதவீதம் தேர்ச்சி அடைந்தோம். எங்குமே இல்லாத அளவுக்கு 15 ஏக்கரில் எங்கள் பள்ளியில் மைதானம் உள்ளது. இதனால் எங்கள் பள்ளி மாணவர்கள் விளையாட்டிலும் சிறந்து விளங்குகின்றனர். அண்மையில் நடந்த ‘பீச் வாலிபால்’ போட்டியில் மாநிலஅளவில் சிறப்பிடம் பெற்றனர். இரவுநேரங்களில் பள்ளி வளாகத்தில் சிலர்சமூக விரோத செயல்களில் ஈடுபட்டனர். தற்போது சிசிடிவி கேமராபொருத்தியதால் அந்தப் பிரச்சினையும்இல்லை. மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதால் தொலைவில் உள்ள மாணவர்களும் எங்கள் பள்ளியில் சேர ஆர்வம்காட்டி வருகின்றனர். இவ்வாறு பிரிட்டோ கூறினார்.