திறன் மேம்பாடு, வேலைவாய்ப்புக்கு  ஆந்திராவில் தனி பல்கலை.: முதல்வர் ஜெகன்மோகன் அறிவிப்பு

திறன் மேம்பாடு, வேலைவாய்ப்புக்கு  ஆந்திராவில் தனி பல்கலை.: முதல்வர் ஜெகன்மோகன் அறிவிப்பு
Updated on
1 min read

அமராவதி

‘‘திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்புக்கென தனி பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்’’ என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஆந்திர மாநிலத்தின் ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் ஒரு புதிய கல்லூரி உருவாக்கப்படும். அந்தக் கல்லூரிகள் புதிதாக உருவாக்கப்படும் பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்படும். இந்தப் பல்கலைக்கழகம் மாணவர்களின் திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் செயல்படும்.

ஐடிஐ, பாலிடெக்னிக், பொறியியல் மற்றும் பிற படிப்புகளைப் படிக்கும் மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படும். அனைத்து அரசுத்துறைகளும் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படும். இதில் ஒவ்வொரு மாணவருக்கும் ஓராண்
டுக்கு தொழில் பழகுநர் பயிற்சி வழங்கப்படும். தேவைப்பட்டால் அடுத்த 6 மாதங்களுக்கும் பயிற்சி நீட்டிக்கப்படும்.
பல்கலைக்கழக செயல்பாட்டுக்கென ஐஏஎஸ் அதிகாரி ஒருவர்நியமிக்கப்படுவார். திறன் மேம்பாட்டுவகுப்புகளை அவர் கவனித்துக் கொள்வார். மாணவர்களின் திறன்களை வளர்க்கவும் வேலைவாய்ப்பை உருவாக்கவும் தேவையான நிதியை,நிதித்துறை வழங்கும். ஏற்கெனவே உள்ள வேலைவாய்ப்பு அலுவலகமும் டிஜிட்டல் மயமாக்கப்படும். அதற்கென தனிச் செயலி உருவாக்கப்படும். இதற்காக ஆந்திராமுழுவதும் 25 கல்லூரிகள் உருவாக்கப்பட்டு, தனி பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்படும்.

இவ்வாறு முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆந்திர முதல்வராகப் பதவியேற்றதில் இருந்தே அதிரடியாக செயல்திட்டங்களை அறிவித்துவரும் ஜெகன்மோகன் ரெட்டி, சம்பந்தப்
பட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்திய பிறகு இதை அறிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in