

சென்னை
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் நிர்வாக ஆலோசனைக் கூட்டம் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற்றது. இதில் அத்துறையின் அமைச்சா் செங்கோட்டையன், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத் தலைவர் என்.ராமச்சந்திரன், டேக்வாண்டோ விளையாட்டு சங்கத் தலைவர் ஐசரி கே.கணேஷ் உட்பட 40 விளையாட்டு சங்கங்களின் தலைவா்கள் மற்றும் செயலர்கள் கலந்துக்கொண்டனர். இதில் கிராமப்புற இளைஞர்களின் திறன்களை கண்டறிந்து ஊக்குவிப்பது பற்றி விவாதிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் இருக்கும் மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்த கபடி, வாலிபால், கிரிக்கெட் மைதானங்கள் அமைக்கப்படும். டிசம்பர் மாதத்துக்குள் அனைத்து இடங்களுக்கும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும்’’ என்றார்.