

புதுடெல்லி:
தேர்தல் சமயங்களில் அதிகளவில் போலி செய்திகள் பரப்பப்படுகிறது. எனவே பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் உள்ள கணக்குகளை, ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று அஸ்வினிகுமார் உபாத்யா என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதிகள் இதுசம்பந்தமான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.