

புதுடெல்லி:
இந்தியாவில் ரிமோட் மூலம் இயங்கும் ஆளில்லா குட்டிரக விமானங்களின் (டிரோன்) பயன்பாடு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. மேலும், பாகிஸ்தான் பகுதியில் இருந்து காஷ்மீருக்குள் ஆயுதங்களை கொண்டு வர தீவிரவாதிகள் டிரோன்களை பயன்படுத்துவதாக கடந்த வாரம் தகவல்கள் வெளியாகின. இதனை கட்டுப்படுத்த விமான பாதுகாப்பு ஆணையம் (பிசிஏஎஸ்) முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் டிரோன்கள் மூலம் நடக்கும் தாக்குதல்களுக்கு எதிராக விமானப் பாதுகாப்பைப் பலப்படுத்த ஒரு குழுவை அமைத்துள்ளதாக பிசிஏஎஸ் இயக்குநர் ஜெனரல் ராகேஷ் அஸ்தானா கூறினார்.
இதுகுறித்து பிசிஏஎஸ் துணை இயக்குநர் ஜெனரல் மகேஸ்வர் தயால் கூறுகையில், “டிரோன் கட்டுப்பாடுகள் ஒரு வாரத்துக்குள் அமலுக்கு வரும்” என்றார்.