

ராமேசுவரம்
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் உரிமைகள் உடன்படிக்கை ஏற்பட்ட 30-வதுஆண்டு கொண்டாட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது.
குழந்தை உரிமைகள் மீதான உடன்படிக்கையை 1989-ம் ஆண்டு ஐ.நா. சபை ஏற்றது. இது இந்தியாவில் 1992-ல் நடைமுறைக்கு வந்தது. ஐ.நா.சபையில் குழந்தைகள் உரிமை மீதான உடன்படிக்கை ஏற்பட்டு 30-வது ஆண்டு கொண்டாட்டம் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடிவட்டம் சாயல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் திங்கட்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை மேரி தலைமை வகித்தார். தொழிலாளர் நலஉதவி ஆணையர் சங்கர், வட்டார குழந்தைகள்வளர்ச்சி அலுவலர் தேன்மொழி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவைச் சேர்ந்த சிவராம கிருஷ்ணன், சைல்ட்லைன் ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு எதிராகநடைபெறும் வன்முறை, சுரண்டல், தீங்குஇழைத்தல், புறக்கணிப்பு ஆகியவற்றில் இருந்துஅவர்களைப் பாதுகாத்து குழந்தைகள் ஆரோக்கியமாக உயிர் வாழ மற்றும் உடல்,மன வளர்ச்சி பெற்று தனித்தன்மையுடன்வளர்வது குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. மக்கள் செயல்பாட்டு இயக்கம் ஏற்பாடுசெய்திருந்த இந்நிகழ்ச்சியில் சாயல்குடியைச்சுற்றியுள்ள 35 கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள் கலந்து கொண்டனர்.