Published : 20 Oct 2019 09:17 AM
Last Updated : 20 Oct 2019 09:17 AM

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு வெளியீடு: பாடவாரியாக மதிப்பெண்கள் அறிவிப்பு

சென்னை

முதுநிலை ஆசிரியர் போட்டித் தேர்வு எழுதிய பட்டதாரிகளுக் கான மதிப்பெண் விபரங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளி யிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,144 முதுநிலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக் குநர் நிலை-1 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு கடந்த செப்டம்பர் 27, 28, 29-ம் தேதிகளில் நடைபெற்றது.

மாநிலம் முழுவதும் உள்ள 154 தேர்வு மையங்களில் மொத்தம் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 580 பேர் தேர்வு எழுதினர். அதன் பின் செப்டம்பர் 30-ம் தேதி தேர்வர் களின் விடைத்தாள்கள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டன.

இதைத் தொடர்ந்து தமிழ் உள்ளிட்ட 12 பாடங்களுக்கான மதிப்பெண் விபரங்களை டிஆர்பி வெளியிட்டுள்ளது. மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெற்றது. அதில் தேர்ச்சி பெற, குறைந்தபட்ச தகுதியாக, எஸ்டி பிரிவினர் 40, எஸ்சி 45 மற்றும் இதர பிரிவினர் 50 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை தேர்வில் இயற்பியல், தாவரவியல், உடற்கல்வியியல், புவியியல், மனை அறிவியல், இந்திய கலாச்சாரம், அரசியல் அறிவியல், ஆங்கிலம், உயிரி வேதியியல், வணிகவியல், தமிழ், மைக்ரோ பயோலஜி ஆகிய 12 பாடங்களுக்கான மதிப்பெண் விபரங்கள், தேர்வு வாரிய இணை யதளத்தில் (http://trb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளது. மேலும், தேர்வானவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதி பின்னர் அறிவிக் கப்படும். மேலும் வரலாறு உள்ளிட்ட 5 பாடங்களுக்கான மதிப்பெண் விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x