Published : 20 Oct 2019 08:35 AM
Last Updated : 20 Oct 2019 08:35 AM

பள்ளிகளில் காய்கறித் தோட்டம் அமைக்க வேண்டும்: மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை சுற்றறிக்கை

சென்னை

அனைத்து வகை பள்ளிகளிலும் காய்கறித் தோட்டம் அமைக்க வேண்டும் என்று மனிதவள மேம் பாட்டுத் துறை அமைச்சகம் அறி வுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் இணை செயலர் ஆர்.சி.மீனா, அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங் களின் தலைமைச் செயலாளர்க ளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:

நகரமயமாக்கல் மற்றும் பெருகி வரும் சுற்றுச்சூழல் பிரச்னைகளை சரிசெய்யும் முனைப்பில் பள்ளி களில் ஊட்டச்சத்து நிறைந்த காய்கறித் தோட்டங்கள் அமைக் கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட் டுள்ளது. இதற்கான வழிகாட்டுதல் அடங்கிய கையேடு கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி, நகரங்கள் உட்பட அனைத்து வகை பள்ளிகளிலும் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து நிறைந்த காய்கறித் தோட்டங்களை உருவாக்க வேண்டும்.

இத்தகைய தோட்டங்கள் ஆரோக்கியமான சூழலை மாணவர் களுக்கு ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். தேவையான விதைகள், கன்றுகள், உரம், உதவிகள் மற்றும் முறையான பயிற்சி மத்திய அரசு சார்பில் வழங்கப்படும். இது தவிர தோட்டக் கலைத் துறை, விவசாயத் துறை, உணவு மற்றும் ஊட்டச்சத்து மையம், வேளாண் பல்கலைக்கழகங்கள் மற்றும் வனத் துறையின் உதவியைக் கொண்டும் பணிகளை மேற்கொள்ளலாம். தோட்டத்தை உருவாக்கும் பணிக்கு 100 நாள் வேலைத்திட்ட தொழி லாளர்களையும் பயன்படுத்தலாம்.

இந்த தோட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க பொறுப்பாசிரியர் ஒருவரை நியமிக்க வேண்டும். குழந்தைகளின் ஊட்டச்சத்து விகி தத்தை அதிகப்படுத்தவும், நமக்கு தேவையான காய்கறிகள், பழங் களை உருவாக்கிக் கொள்ளும் திறனை வளர்த்துக் கொள்ளவும் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள் ளது. இதன்மூலம் காய்கறி தோட்ட திட்டத்தை மாணவர்கள் தங்கள் வீடுகளில் செயல்படுத்துவதற்கான விழிப்புணர்வையும் உருவாக்க வேண்டும். மேலும், வழிகாட்டுதல் களின் அடிப்படையில் இதுதொடர் பான அறிவுறுத்தல்களை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அதிகாரிகள் வழங்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x