

சென்னை
அரசு, அரசு உதவி கலை, அறிவியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை 2.16 லட்சமாக உயர்ந்துள்ளது.
தமிழக உயர்கல்வித் துறை யின்கீழ் 14 கல்வியியல் கல்லூரிகள் உட்பட மொத்தம் 113 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் செயல் பட்டு வருகின்றன. இதில் 4 லட்சத் துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். சமீபகாலமாக மருத்துவம், பொறியியல் உட்பட படிப்புகளின் மீதான மோகம் குறைந்து வருவதால் கலை, அறி வியல் படிப்புகள் மீது மாணவர் களின் கவனம் திரும்பியுள்ளது.
இதையொட்டி, கல்லூரிகளில் கூடுதலாக 20% இடங்கள் ஒதுக்கிக் கொள்ளவும் இந்த ஆண்டு உயர் கல்வித் துறை அனுமதி அளித்தது.
அதன் பலனாக அனைத்து வகை கலை, அறிவியல் கல்லூரி களில் சேர்க்கை கணிசமாக உயர்ந் துள்ளது. இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குநரக அதிகாரிகள் கூறும்போது, ‘‘2018-19 கல்வி ஆண் டில் அரசு, அரசு உதவி மற்றும் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி களில் 2.03 லட்சம் மாணவர்கள் சேர்ந்தனர்.
நடப்பு ஆண்டில் (2019-20) மாணவர் சேர்க்கை 2.16 லட்சமாக உயர்ந்துள்ளது. பல் வேறு புதிய படிப்புகள் தொடங் கப்பட்டுள் ளதால் அடுத்த ஆண்டு எண்ணிக்கை 2 மடங்கு உயரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது’’ என்றனர்.