

சென்னை
பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித்தொகைக்கு தகுதி (ஜெஆர்எப்) பெறவும் "நெட்" தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான நெட் தேர்வானது, தேசிய தேர்வு முகமை (என்டிஏ) சார்பில் டிசம்பர் மாதம் நடத்தப்பட உள்ளது.
நெட் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் சென்னை பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட உள்ளன. இப்பயிற்சியில் ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவுகளைச் சேர்ந்த மாணவா்கள் மட்டுமே பங்கேற்க முடியும். பயிற்சி வகுப்புகள் நவம்பர் 2 முதல் 24-ம் தேதி வரை நடைபெறும் என்று மாற்றப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை (www.unom.ac.in) பதிவிறக்கம் தெரிந்து கொள்ளலாம் என சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.