Published : 18 Oct 2019 07:21 AM
Last Updated : 18 Oct 2019 07:21 AM

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக  நோபல் பரிசு பெற்ற  இந்தியர் பிரிட்டனுக்கு கடும் எதிர்ப்பு 

லண்டன்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகும் முடிவுக்கு பிரிட்டன் ராயல் சொசைட்டியின் தலைவரும், வேதியியல் துறையில் நோபல் விருது பெற்றவருமான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பிரிட்டன் அரசு இப்போது சர்வதேச அறிவியல் திறமைகளுக்கு குறைந்த இடத்தை தரவே முடிவு செய்துள்ளது. ஒப்பந்தம் இல்லாத ‘ப்ரெக்ஸிட்’டில் இருந்து (ஐரோப்பிய ஒன்றியத்தில்) விலகும் பிரிட்டனின் முடிவு, அறிவியலை பாதிப்பதால் தேசிய நலனும் பாதிக்கிறது. இங்கிலாந்துக்கு வரும் முன்னணி ஆராய்ச்சியாளர்களை நாம் ஏற்கனவே இழந்து வருகிறோம்.

மக்கள் விரும்புவது தொழில் வாழ்க்கைதான். சூதாட்டத்தை இல்லை. உலகளாவிய விஞ்ஞானத் தலைமையைத் தக்க வைத்துக் கொள்ள இங்கிலாந்து தயாராக இருக்குமா?

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறினால் அறிவியல் துறையில் இங்கிலாந்து ஆண்டுக்கு பல பில்லியன் யூரோக்களை இழந்து விடும். ஒப்பந்தம் இல்லாத பிரெக்ஸிட்டால் அறிவியல் மற்றும் ஒத்துழைப்பு திட்டங்கள் கடுமையாக பாதிக்கும்.

உலகின் மிகப்பெரிய சர்வதேச முதலீடு மற்றும் திறமைகளை ஈர்ப்பதில் இங்கிலாந்து வீழ்ச்சியை சந்திக்கும். 2015-ம் ஆண்டில், இங்கிலாந்து நிறுவனங்களில் 515 நபர்கள் எம்எஸ்சிஏ தனிநபர் பெல்லோஷிப்பை எடுத்துக் கொண்டனர். 2018-ம் ஆண்டில், இந்த எண்ணிக்கை 336 ஆக குறைந்தது. ஐரோப்பிய ஆராய்ச்சி திட்டங்களுக்குள் இங்கிலாந்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.

இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியிருந்தார். வேதியியல் ஆய்வாளர் வெங்கட் ராமன் ராமகிருஷ்ணன் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x