Published : 18 Oct 2019 07:17 AM
Last Updated : 18 Oct 2019 07:17 AM

ரேபிஸ் தடுப்பூசிகளை வாங்க டெல்லி அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி

டெல்லி அரசு மருத்தவமனைக்கு ஏலதாரர் விகித ஒப்பந்தத்தை திரும்பப் பெறுதல், தரம் இல்லாத தடுப்பு ஊசி போன்ற காரணங்களால் தடுப்பு ஊசிகளை கொள்முதல் செய்ய அரசால் முடியவில்லை. இதனால், ரேபிஸ்க்கு போடப் பட்டும் தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனை பாஜக போன்ற எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடி வருகின்றன.

இந்நிலையில், டெல்லி அமைச்சரவை நேற்று முன்தினம் அவசரமாக கூடியது. இதில், டெல்லி மாநில அரசு மருத்துவ
மனைகளுக்கு தேவையான ரேபிஸ் தடுப்பூசிகளை உடனடியாக வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 40,000 தடுப்பூசிகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x