

திம்பு
15 வயதுக்கு உட்பட்டோருக்கான தெற்காசிய கால்பந்து போட்டியில் இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
15 வயதுக்கு உட்பட்ட மகளிருக்கான தெற்காசிய கால்பந்து போட்டி திம்பு நகரில் நடைபெற்றது. இதில் செவ்வாய்கிழமை நடந்த இறுதி ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்த்து இந்தியா ஆடியது. இப்போட்டியின் இறுதியில் இரு அணிகளும் சமநிலையில் இருந்ததால் டைபிரேக்கர் முறை அமல்படுத்தப்பட்டது. இதில் இந்திய அணி 5-3 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.