

லக்னோ
உத்தரபிரதேச மாநிலத்தில் வரும் நவம்பர் மாதம் 30-ம் தேதி வரை விடுப்புகள் ரத்து செய்யப்பட் டுள்ளன.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு விரைவில் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், வரும் நாட்களில் தீபாவளி உட்பட பல்வேறு பண்டிகைகள் வருகின்றன. இதை முன்னிட்டு உத்தரபிரதேச அதிகாரிகள் அனைவருக்கும் நவம்பர் 30-ம்தேதி வரை விடுப்புகள் ரத்து செய்யப்படுவதாகவும், அனைவரும் தினமும் தவறாமல் பணியில் இருக்க வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.- பிடிஐ