Published : 14 Oct 2019 10:23 AM
Last Updated : 14 Oct 2019 10:23 AM

அறுவடை முடிந்து பயிர் தாளடிகளை எரிப்பதால் டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு

புதுடெல்லி

தலைநகரம் டெல்லியில் தொடர்ந்து 4-வது நாளாக காற்று மாசின் அளவு அதிகரித்தது. நாட்டின் தலைநகரமான டெல்லியில் காற்று மாசு பிரச்சினை பெரும் தொல்லையாக இருக்கிறது. டெல்லியில் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும், பஞ்சாய், ஹரியாணா, உத்தரபிரேதேசம், ராஜஸ்தான் போன்ற டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களில், அறுவடைக்கு பின் விவசாய கழிவுகள் எரிக்கப்படும்போது ஏற்படும் புகையும் டெல்லிக்கு அச்சுறுத்தலாக உள்ளது.

தற்போது டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களில் அறுவடைக் காலம் முடிந்துள்ள நிலையில், விவசாய கழிவுகள் எரிக்கப்பட்டு வருவதால், டெல்லியில் கடும் காற்று மாசு ஏற்பட்டுள்ளது. அதாவது, டெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை காற்றின் மாசு 208 என்ற அளவுகோலில் இருந்தது.

இது சனிக்கிழமை 222 ஆக உயர்ந்தது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று 256 உயர்ந்துள்ளது. இதுகுறித்து, எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சிலின் ஆய்வாளர்எல்.எஸ்.குறிஞ்சி கூறுகையில், “பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் உள்ள விவசாயிகள் கடந்த 2 நாட்களாக விவசாயகழிவுகளை எரித்து வருகின்றனர். துரதிருஷ்டவசமாக காற்றின் திசைடெல்லியை நோக்கி உள்ளது. இதனால், அதிகப்படியான புகை டெல்லிக்கு வருகிறது. இந்நிலை தொடர்ந்தால், காற்று மாசு டெல்லியில் மிகவும் அபயகரமாகிவிடும்” என்றார்.

கடந்த 3 மாதங்களில் டெல்லியின் காற்றின் தரம் மிகவும் மோசமாக நிலைக்கு சென்றுள்ளது. பஞ்சாய், ஹரியாணா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மாநிலத்தில், விவசாய பொருட்களை எரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த 2015-ம் ஆண்டு தடை விதித்தது. இதனால் டெல்லியில் காற்று மாசுப்பாடு அளவு சரியானது.

ஆனால், தற்போது டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாய பொருட்கள் மீண்டும் எரிக்கப்பட்டு வருவதால் காற்றின் மாசு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், டெல்லியில் கடந்த வாரம் பத்திரிகையாளர்களை சந்தித்த, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், “காற்று மாசுப்பாடு குறித்து கண்டறிய 46 குழுக்களை மத்திய மாசு கட்டுபாட்டு வாரியம் அமைத்துள்ளது” என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x