Published : 14 Oct 2019 08:10 AM
Last Updated : 14 Oct 2019 08:10 AM

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு விதியில் திருத்தம்

சென்னை

ஆசிரியர் பொது மாறுதல் கலந் தாய்வு தொடர்பான புதிய வழி காட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும்.

அதன் படி நடப்பு ஆண்டு கலந்தாய்வு விதி முறைகளில் ஒரே பள்ளியில் குறைந்தது 3 ஆண்டுகள் பணி புரிந்தவர்களுக்கு மட்டும் இடமாறுதல் தரப்படும் என பள்ளிக் கல்வித்துறைஅறிவித்திருந்தது. இதை தளர்த்தக் கோரி நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இதனால் கலந்தாய்வு நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றியிருக்க வேண்டும் என்ற விதியை தளர்த்தி கலந்தாய்வை நடத்த பள்ளிக் கல்வித் துறைக்கு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.

அதையேற்று வழக்கு தொடர்ந்த ஆசிரியர்களுக்கு மட்டும் விதியை தளர்த்தி திருத்தப்பட்ட வழிகாட்டு நெறி முறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறையின் முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ்வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:

நடப்பு கல்வியாண்டுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி திருத்தம் செய்து வெளியிடப்படுகிறது. அதன்படி, பார்வையற்றவர்கள், 40 சதவீதத்துக்கு மேல் உடல் குறையுடைய மாற்றுத்திறனாளிகள், சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள், புற்றுநோயாளிகள் உள்ளிட் டோருக்கு மட்டும் ‘‘குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரிந்திருக்க வேண்டும்’’ என்ற விதியானது தளர்த்தப்படுகிறது. இந்த தளர்வு, நடப்பு ஆண்டுக்கு மட்டுமே பொருந்தும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x