

தர நிர்ணய நாள்
உலக தர நிர்ணய நாள் அக்டோபர் 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. தர நிர்ணயம் என்பது என்ன? உலகம் முழுவதும் பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
நம் பயன்பாட்டுக்காக உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் தரமானவைதானா என்று பார்ப்பது முக்கியமான கடமை. சந்தையில் வாங்கும் பொருட்களில் ISO தர சான்று அளிக்கபட்டுள்ளதா என்பதை கவனிப்பது அவசியம்.
இந்தியாவில் BIS (Bureau of Indian Standards) தரச் சான்று அளிக்கப்பட்டிருக்கும் பொருட்களை கவனமாக பார்க்க வேண்டும். BIS என்பது ISO-வில் அங்கம் வகிக்கும் ஓர் அமைப்பு.
அனைத்து மக்களுக்கும் தரமான பொருட்கள் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக 1970-ம் ஆண்டில் இருந்து உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.