

சாத்தனூர்
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 77 அடியாக உயர்ந்தது. கிருஷ்ணகிரி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால், சாத்தனூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. 119 அடி உயரம் உள்ள சாத்தனூர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 77 அடியாக இருந்தது.
அணையில் 1,286 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 1,967 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. வெப்பச்சலனம் காரணமாக திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்த போதும், சாத்தனூர் அணையின் நீர் மட்டம் உயரவில்லை.
இந்நிலையில் கிருஷ்ணகிரி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், தென்பெண்ணையாறு வழியாக வருவதால் சாத்த னூர் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.