

ஷாங்காய்: ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் கால் இறுதிச் சுற்றுக்கு ஜெர்மனி வீரரான அலெக்சாண்டர் செரேவ் முன்னேறியுள்ளார்.
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டிகள் தற்போது ஷாங்காய் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த போட்டியில் ஜெர்மன் வீரரான அலெக்ஸாண்டர் செரேவ், பிரான்ஸ் வீரரான ஜெரீமி சார்டியை எதிர்கொண்டார். இப்போட்டியில் செரேவ் 7-6, 7-6 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார். இதன்மூலம் இப்போட்டியின் கால் இறுதிச் சுற்றுக்கு செரேவ் முன்னேறினார்.
முன்னதாக நேற்று முன்தினம் நடந்த 2-வது சுற்றுப் போட்டியில் இங்கிலாந்து வீரரான ஆண்டி முர்ரே, 10-ம் நிலை வீரரான பாபியோ பாக்னினியை எதிர்கொண்டார். இப்போட்டியில் 7-6 , 2-6, 7-6 என்ற புள்ளிக்கணக்கில் முர்ரே தோல்வியடைந்தார்.