Published : 09 Oct 2019 09:06 AM
Last Updated : 09 Oct 2019 09:06 AM

அஸ்வினும் அகழ்வாராய்ச்சியும்

விசாகப்பட்டினம்

கிரிக்கெட் போட்டிகளில் ஆடாத சமயத்தில் அகழ்வாராய்ச்சியைப் பற்றிய புத்தகங்களை படிப்பதில் ஆர்வம் செலுத்தியதாக இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்காக கிரிக்கெட் போட்டியில் ஆடாத சமயத்தில் என்ன செய்தீர்கள் என்று செய்தியாளர்கள் அஸ்வினிடம் கேட்டனர். அதற்கு அஸ்வின் கூறியதாவது:

கிரிக்கெட் போட்டிகளில் ஆடாமல் இருப்பது எனக்கு மிகவும் கடினமானதாக இருந்தது. எனவே இந்திய அணிக்காக ஆடாத நாட்களில் இங்கிலாந்தில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் போட்டியான கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் ஆடினேன்.

நான் இல்லாமல் இந்திய அணி ஆடும் ஆட்டங்களை டிவியில் பார்க்கும்போது கொஞ்சம் வருத்தமாக இருக்கும். என் வாழ்க்கை கடந்த 25 வருடங்களாக கிரிக்கெட்டைச் சுற்றியே உள்ளது. கிரிக்கெட்டில் என்னுடைய முன்னேற்றங்களுக்கு குடும்பத்தினரும் முக்கிய காரணமாக இருந்துள்ளனர்.

அதனால் நான் கிரிக்கெட் விளையாடாத நாட்களில் குடும்பத்தினருடன் அதிக நேரத்தைச் செலவழித்தேன். அகழ்வாராய்ச்சி சம்பந்தமான புத்தகங்களைப் படித்து நிறைய விஷயங்களைத் தெரிந்துகொண்டேன். இதுபோன்ற புதிய துறைகளில் எனது ஆர்வத்தை வளர்த்துக் கொண்டேன். இவ்வாறு அஸ்வின் கூறினார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x