Published : 09 Oct 2019 08:46 AM
Last Updated : 09 Oct 2019 08:46 AM

வாக்காளர்கள் பட்டியலுடன் ஆதார் இணைப்பு?

புதுடெல்லி

வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைப்பதற்கு சட்டத் திருத்தம் கொண்டுவர மத்திய சட்ட அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.

இப்போதைய நிலவரப்படி, சிலருடைய பெயர் சொந்த ஊர், வசிக்கும் ஊர் என ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இதைத் தடுக்க, வாக்காளர் பட்டியலை ஆதார் எண்ணுடன் இணைக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டது.

‘‘ஏற்கெனவே வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் மற்றும் புதிய வாக்காளர்களிடம் ஆதார் எண்ணை கேட்டுப் பெற ஏதுவாக, சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்’’ என மத்திய சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியது.இந்தக் கோரிக்கையை பரிசீலித்து வருவதாக சட்ட அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x