Published : 07 Oct 2019 06:10 PM
Last Updated : 07 Oct 2019 06:10 PM

தமிழ் தெரியாமல் இருந்ததற்கு வருந்துகிறேன்: தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா ஆதங்கம்

புதுடெல்லி
ஐ.நா. பேரவையில் உரையாற்றிய பிரதமர் மோடி, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்னும் புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டினார். ''ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான பண்பாடு இந்தியப் பண்பாடு. இந்தியாவின் வளர்ச்சி, வளரும் நாடுகளுக்கு உதாரணம்.

அனைத்து மக்களையும் , எங்கள் மக்களாக கருதுகிறோம். யாதும் ஊரே யாவரும் கேளிர் என 3,000 ஆண்டுகளுக்கு முன்பே எங்கள் நாடு கூறியது'' என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து சமூக வலை தளங் களில் பதிவிட்டனர். சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி மீண்டும் தமிழ் மொழியின் சிறப்பு குறித்து பேசினார். தமிழ் உலகம் முழுவதும் பேசப்படும் அளவிற்கு உயர்ந்துள்ளது, தமிழ் மொழி, உலகிலேயே மிகதொன்மையான மொழி என்று கூறினார்.

இந்த நிலையில் பிரதமர் மோடியின் கருத்தை வரவேற்று பிரபல தொழிலதிபரும், மஹேந்திரா நிறுவனத்தின் தலைவருமான ஆனந்த் மகேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
உலகில் வழக்கில் இருக்கும் மொழிகளில் தமிழ் தான் பழமையான மொழி என்பதை ஐ.நா.வில் பிரதமர் மோடி பேசும் வரை தெரியாமல் இருந்ததற்காக வெட்கப்படுகிறேன். இந்த உண்மை எனக்கு தெரியவில்லை. இதனை ஒப்புக்கொள்கிறேன். இந்த பெருமையையும், அறிவையும், நாம் இந்தியா முழுவதும் மிக அதிக அளவில் பரப்ப வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x