

போபால்: நாடு முழுவதும் கடந்த இரு வாரங்களாக தக்காளி விலை ரூ.100-ஐ கடந்து விற்பனையாகி வருகின்றது. உத்தராகண்ட், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.250-க்கு விற்பனையாகிறது. தக்காளி விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம், அசோக் நகர் பகுதியில் உள்ள செல்போன் கடை ஒன்றில், ஸ்மார்ட் போன் வாங்கினால் 2 கிலோ தக்காளி இலவசம் என அறிவிக்கப் பட்டுள்ளது.
இது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து கடை உரிமையாளர் அபிஷேக் கூறுகையில், ‘தக்காளி விலை அதிகரித்துள்ள நிலையில், தக்காளியை இலவசமாக வழங்கினால் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்க ஒரு வாய்ப்பாக இருக்கும்’ எனத் தெரிவித்தார்.