Published : 06 Jul 2023 04:15 AM
Last Updated : 06 Jul 2023 04:15 AM
சென்னை: இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு 5 கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தி 30 லட்சம் மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார்.
ஆண்டுதோறும் இறுதித் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை வழங்கி கலந்துரையாடுவார். இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு 5 கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தி மேற்கண்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் அவரவர் தாய்மொழியில் பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.
அதன் விவரம்: வளர்ச்சியடைந்த பாரதத்தின் இலக்கு, அடிமை சிந்தனையை அறவே நீக்குதல், நம் பாரம்பரியத்தை கொண்டாடுதல், ஒற்றுமையை உறுதி செய்தல், கடமைகளில் கவனம் செலுத்துதல் ஆகிய 5 கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள 30 லட்சம் மாணவர்களுக்கு பிரதமர் மோடி தனது கைப்பட கடிதம் எழுதி கையெழுத்திட்டு அனுப்பியுள்ளார். இதில் தமிழகத்தை சேர்ந்த 1 லட்சம் மாணவர்களும், உத்தர பிரதேசத்தை சேர்ந்த 6 லட்சம் மாணவர்களும் இடம்பெற்றுள்ளனர்.
நாட்டுப்பற்றை உருவாக்கும் வகையில் கடிதம் அமைந்துள்ளது. அத்துடன், பிரேம்போட்டு வீட்டில் மாட்டிவைத்துக் கொள்ளும் வகையில் சிறந்த வடிவமைப்புடன்கூடிய ஒரு சான்றிதழும் இணைக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT