Published : 04 Jul 2023 04:24 AM
Last Updated : 04 Jul 2023 04:24 AM
புதுடெல்லி: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோயம்புத்தூர் வரை செல்லும் வந்தே பாரத் ரயில் சேவையை கடந்தஏப்ரல் மாதம் பிரதமர் மோடி சென்னையில் தொடங்கி வைத்தார். இந்த ரயில் சென்னையில் இருந்து காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், திருப்பூர் வழியாக கோயம்புத்தூர் வரை இரு மார்க்கமாகவும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை சென்ட்ரல் -திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த வந்தே பாரத் ரயிலை வரும் 7-ந்தேதி காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். சென்ட்ரல்- திருப்பதி இடையேயான வந்தே பாரத் ரயில் ஜோலார்பேட்டையில் நின்று செல்லும் வகையில் பயண திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT