Published : 04 Jul 2023 04:26 AM
Last Updated : 04 Jul 2023 04:26 AM
புதுடெல்லி: இந்தியா - பாகிஸ்தான் நாடுகளின் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் பற்றிய விவரங்களை பரஸ்பரம் பகிா்ந்து கொள்வதற்கான ஒப்பந்தம் கடந்த 2008-ம் ஆண்டில் கையொப்பமானது. கைதிகள் தொடா்பான விவரங் களை இருநாடுகளும் ஜனவரி 1, ஜூலை 1 ஆகிய தேதிகளில் தூதரகம் வாயிலாகப் பகிா்ந்துகொண்டு வருகின்றன.
அதன்படி, பாகிஸ்தானின் சிறைகளில் 308 இந்தியா்கள் கைதிகளாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவா்களில் 266 போ் மீனவா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், இந்திய சிறைகளில் உள்ள 417 பாகிஸ்தானியா்கள் குறித்த விவரங்களை டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திடம் இந்தியா வழங்கியுள்ளது. அவா்களில் 74 போ் மீனவா்கள் ஆவா். மீதமுள்ளோா் பல்வேறு குற்றச்சாட்டுகளில் தொடா்புடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியக் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும், அவா்களை விரைந்து விடுவிக்குமாறும் பாகிஸ்தான் அரசிடம் கோரியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT