

இசை: class-ல் எல்லா subjects -ஐயும் நடத்தி முடிச்சிட்டாங்க.
உமையாள்: அடுத்து வரிசையா model exam நடக்கும்.
இனியன்: அதற்கு பிறகு final exam வரும்.
மித்ரன்: அடுத்து one month vacation கிடைக்கும்.
இசை: பாட்டி, இந்த academic year ஆரம்பிச்சதுல இருந்து எங்களுக்கு grammar சொல்லி குடுத்துட்டு இருக்கீங்க.
உமையாள்: இதுவரை என்னெல்லாம் பார்த்தோம்னு கொஞ்சம் திருப்பி பார்க்கலாமா?
பாட்டி: கண்டிப்பா பார்க்கலாம் கண்ணுங்களா. இதுவரை என்ன topic எல்லாம் பார்த்தோம்னு யாரவது ஒருத்தர் சொல்லுங்க.
மித்ரன்: எல்லாத்தையும், நான் ஒரு note போட்டு எழுதி வச்சிருக்கிறேன். நானே வாசிக்கிறேன்.
பாட்டி: Excellent work.
இனியன்: தினமும் கொஞ்சம் technique தான் பார்க்கிறோம்னு நினைச்சிட்டு இருந்தேன்.
உமையாள்: இப்போ மொத்த list-ஐ பார்க்கும் பொழுது, அட இவ்வளவு படிச்சிருக்கிறோமானு ஆச்சரியமா இருக்குது.
இசை: English படிக்கிறதே தெரியாத அளவுக்கு, விளையாடும்போதுதான் எல்லாத்தையுமே படிச்சிருக்கிறோம்.
மித்ரன்: நம்ம விளையாட்டில் இருந்தே நம்மால் படிக்க முடியும் என்பதை எங்க கூடவே இருந்து சொல்லி கொடுத்துட்டிங்க பாட்டி.
பாட்டி: நானும் என்னுடைய கிராமத்துக்கு போயிட்டு வரேன். உங்களுக்கு annual exam வரப்போகுது. தேர்வை நல்லா எழுதுங்க.
உமையாள்: சரி பாட்டி
பாட்டி: முழு ஆண்டுத்தேர்வு விடுமுறைக்கு பிறகு நாம சந்திக்கலாம்.
(தொடரும்)
- ஷர்மிளா தேசிங் | கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்