

இனியன்: ஒன்றைபோல் மற்றுமொன்று இருக்கிறது என்று சொல்வது positive degree.
இசை: ஒன்றை விட மற்றொன்று சிறந்ததாக இருக்கிறது என்று சொல்வது comparative degree.
உமையாள்: இருப்பதிலேயே இதுதான் சிறந்தது என்று சொல்வது superlative degree.
மித்ரன்: ஒரு வாக்கியத்தில், எந்த degree-ஐ பயன்படுத்தி ஒப்பீடு செய்திருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிப்பது பாட்டி?
பாட்டி:
* Adjective or adverb உடன் இணைந்து as … as அல்லது so … as வந்தால் அது positive degree of comparison
* Adjective or adverb உடன் இணைந்து … er than அல்லது more … than வந்தால் அது comparative degree of comparison
* Adjective or adverb உடன் இணைந்து the … estஅல்லது the most … வந்தால் அது superlative degree of comparison.
இனியன்: So … as ஆ அப்படின்னா என்ன பாட்டி? எப்போது, எப்படி பயன்படுத்த வேண்டும்?
பாட்டி:
* As … as என்பதை இரண்டு பொருட்களை அல்லது விஷயங்களை நேர்மறை அல்லது எதிர்மறையான கூற்றில் ஒப்பீடு செய்வதற்கு positive degree of comparison-ல் பயன்படுத்தலாம்.
* So …. as என்பதை எதிர்மறை ஒப்பீடுகளுக்கு மட்டுமே positive degree of comparison -ல் பயன்படுத்த வேண்டும்.
(தொடரும்)
- ஷர்மிளா தேசிங் | கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்