கொஞ்சம் technique கொஞ்சம் English - 146: Degrees of comparison - குளிர்ந்த தண்ணீர் எது?

கொஞ்சம் technique கொஞ்சம் English - 146: Degrees of comparison - குளிர்ந்த தண்ணீர் எது?
Updated on
2 min read

மித்ரன்: பாட்டி, வெயில் அதிகமாக இருக்குது.

பாட்டி: இந்த பாட்டில்ல இருக்குற குளிர்ந்த தண்ணீரை குடிங்க. கொஞ்சம் இதமாக இருக்கும்.

இனியன்: பாட்டி. இந்த தண்ணீர் ஆற்று தண்ணீர் மாதிரி இருக்குது. எனக்கு இன்னும் கொஞ்சம் குளிர்ச்சியாக இருந்தால் நன்றாக இருக்கும்.

பாட்டி: மண் பானையில் தண்ணீர் ஊற்றி வச்சிருக்கிறேன். அதை எடுத்து குடிங்க.

மித்ரன்: இப்போ தான் வயிறு குளுகுளுன்னு இருக்குது பாட்டி.

இசை: முதலில் நீங்க குடிக்க கொடுத்த தண்ணீர் ஆற்று தண்ணீர் போல இருந்தது.

உமையாள்: அதை விட மண் பானை தண்ணீர் இன்னும் குளிர்ச்சியாக இருக்கிறது.

இனியன்: இன்னும் குளிர்ச்சியான தண்ணீர் ஒன்று இருக்குது.

இசை: freezer -ல் உள்ள பாட்டில் தண்ணீர் தான் அது. நேத்து கொஞ்ச நேரம் இருக்கட்டும்னு வச்சோம். திருப்பி எடுக்க மறந்து விளையாட போய்ட்டோம்.

பாட்டி: இப்போது நடந்த conversation-ஐ degrees of comparison உடன் சேர்த்து சொல்லி பார்க்கலாமா?

மித்ரன்: எதற்கா க degrees of comparison – words list -ஐ படிச்சிட்டு வர சொன்னீங்கனு இப்போ புரியுது பாட்டி.

பாட்டி: Good. அது தெரிந்தால் மட்டுமே நம்மால் degrees of comparison-ல் வாக்கியங்களை உருவாக்க முடியும்.

(தொடரும்)

- ஷர்மிளா தேசிங் | கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in