

பாட்டி: Degrees of comparison-ல் 3 types உள்ளது.
1. Positive degree
2. Comparative degree
3. Superlative degree.
மித்ரன்: Positive degree என்றால் என்ன பாட்டி?
பாட்டி: Positive degree என்பது Adjective or adverb இன் original form (அசல் வடிவம்) என்று சொல்லலாம்.
Positive degree ஆனது எந்த ஒப்பீடையும் செய்ய அனுமதிக்காது.
இது ஒரு பெயர்ச்சொல்லின் (noun) குறிப்பிட்ட தரத்தைப் (quality) பற்றிய தகவலை (information) மட்டுமே வழங்குகிறது.
இனியன்: Comparative degree என்றால் என்ன பாட்டி?
பாட்டி: குறிப்பிட்ட தரத்தில் அல்லது அளவில் (quality or quantity) உள்ள இரண்டு பெயர்ச்சொற்களில் (noun) எது அதிகமாக அல்லது குறைவாக உள்ளது என்பதை தெரிவிக்க comparative degree பயன்படுகிறது.
உமையாள்: Superlative degree என்றால் என்ன பாட்டி?
பாட்டி: இந்த மூன்று வகைகளில், superlative degree-ஐ “Highest degree” என்று சொல்லலாம்.
இரண்டிற்கு மேற்பட்ட பெயர்ச்சொற்களில் (noun) உள்ள ஒத்த குணங்களை ஒப்பிட இது பயன்படுகிறது.
ஒப்பிடப்படும் பெயர்ச்சொற்களில் (noun) குறிப்பிடப்பட்ட தரம் அல்லது குணங்களில் எது மிக அதிக அளவு அல்லது மிகக் குறைந்த அளவு உள்ளது என்பதை தெரிவிக்க superlative degree பயன்படுகிறது.
பாட்டி: இன்றைய table-ல் மேலும் சில வார்த்தைகள் உள்ளது. நேற்றைய list உடன் இதை சேர்த்துக் கொள்ளுங்கள்.
(தொடரும்)
- ஷர்மிளா தேசிங் | கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்