கொஞ்சம் technique கொஞ்சம் English - 144: Degrees of comparison: ஒப்பீடு

கொஞ்சம் technique கொஞ்சம் English - 144: Degrees of comparison: ஒப்பீடு
Updated on
1 min read

இசை: Degrees of comparison என்றால் என்ன பாட்டி? Adjective -க்கும், Degrees of comparison-க்கும் என்ன தொடர்பு?

பாட்டி: Degrees of comparison என்பது Adjective -ன் வேறொரு வடிவம் ஆகும். இது ஒரு நபர் அல்லது பொருளை மற்றொரு தரத்துடன் ஒப்பிட பயன்படுகிறது.

மித்ரன்: ஒப்பீடு என்றால் என்ன பாட்டி?

பாட்டி: இரண்டு பொருட்களின் அல்லது நபர்களுக்கு இடையிலான ஒற்றுமை அல்லது வேற்றுமையைப் பற்றி சொல்லக் கூடிய வார்த்தையை ஒப்பீடு (comparison) என்று சொல்வோம்.

மித்ரன்: சரி பாட்டி.

பாட்டி: Degrees of comparison சில நேரங்களில் Adverb உடனும் இணைந்து வரும்.

இனியன்: அப்படினா Adjective or Adverb இரண்டில் ஓன்று கண்டிப்பாக Degrees of comparison உடன் இணைந்து வரும் என்று சொல்லுங்க.

பாட்டி: You are right.

உமையாள்: ஒப்பிடக் கூடிய குணங்களைக் (comparable quality) கொண்ட பெயர்ச்சொற்களை (noun) ஒப்பிடுவதற்கு (comparison) Degrees of comparison -ஐ பயன்படுத்தலாம். இது சரியா?

பாட்டி: மிகவும் சரி. இந்த table-ல் மேலும் சில வார்த்தைகள் உள்ளன. இதையும் நேற்றைய list உடன் சேர்த்துக் கொள்ளுங்கள்.

(தொடரும்)

கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in