

உமையாள்: அச்சச்சோ (Oops), அந்த நாயை பாரேன். முனங்கிட்டு இருக்குது.
இசை: கவனி(Look), அதோட காலில் அடிபட்டு இருக்குது.
இனியன்: அதனாலதான் நடக்க முடியாமல் அழுதிட்டு இருக்குதா?
மித்ரன்: யாரோ கல்லை கொண்டு எறிஞ்சிருக்காங்க.
இசை: ஷ்ஷ், பக்கத்துல அதோட குட்டி தூங்கிட்டு இருக்குது.
உமையாள்: ஓ, அதை நான் கவனிக்கவில்லை.
இனியன்: உன் கையில் புண்ணுக்கு போடுற மருந்து எதாவது இருக்குதா.
மித்ரன்: Oh no, எப்போதும் கையில் இருக்கும். இன்னைக்கு வீட்டிலேயே விட்டுவிட்டேன் போல.
பாட்டி: Look, பக்கத்தில் veterinary hospital இருக்குது. முதலில் தூக்கிட்டு போவோம். இதோட காயத்திற்கு மருந்து போடுவோம்.
மித்ரன்: ஏன் இப்படி மோசமா நடந்துக்கிறாங்க. எனக்கு அழுகையா வருது.
பாட்டி: Listen, நீ அழுவதால் என்ன பயன்?
மித்ரன்: இதோ (Behold), இப்பவே நான் ஒன்று செய்ய போறேன்.
இனியன்: சொல்லு டா.
மித்ரன்: விலங்குகளை வதைக்காதீர். விலங்குகளுக்கும் உணர்வு உண்டு என்று எழுதி அனைவருக்கும் கொடுக்கப் போறேன்.
பாட்டி: அருமையான யோசனை. நாங்களும் உன் கூட கலந்து கொள்கிறோம்.
- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்