

மித்ரன்: “ஆ”, “ஊ”, “ஹே”, “ஆகா,” “ஓஹோ” எல்லாம் சும்மா ஜாலிக்கு பயன்படுத்தக் கூடிய வார்த்தைகள்னு நினச்சேன்.
இசை: நானும்தான். எதனால் இப்படி அர்த்தமில்லாத வார்த்தைகளை பயன்படுத்திட்டு இருக்கிறோம்னு சில நேரத்தில் யோசித்து பார்த்திருக்கிறேன்.
உமையாள்: இப்போதான் தெரியுது. இதுவும் ஒரு வகையான subject தானு.
இனியன்: ஒவ்வொரு வார்த்தையையும் கவனிச்சு பார்த்தோம்னா, எத்தனை வகையான Interjections வார்த்தைகளை நாம பயன்படுத்திட்டு இருக்கிறோம்னு ஆச்சரியமாக இருக்குது.
இசை: மனித உணர்வுகளை வெளிப்படுத்த கூடுதலாக ஒரு வார்த்தையை சேர்த்தால் போதும்ன்னு பாட்டி பளிச்சுன்னு சொல்லிட்டாங்க.
மித்ரன்: இலக்கண விதியின்படி (Grammatical rule) எழுதும்போது, இதனை பயன்படுத்தக் கூடாதுனும் சொன்னாங்களே.
இனியன்: நீ பரிட்சையில் எழுதும்போது, ச்சக், அச்சோ, ஆகா, ஓஹோன்னு போட்டு எழுதிதான் பாரேன்.
மித்ரன்: கிகிகிகி. இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா சரியா எழுதிட்டு வரேன். அதையும் காலி பண்ணிடலாம் ன்னு பார்க்குறியா.
பாட்டி: ஹஹஹஹா. எல்லாருக்குமே புரிந்தால் சந்தோசம்தான்.
உமையாள்: Interjection-ஐ பயன்படுத்துவதற்கு ஏதாவது rule இருக்குதா பாட்டி?
பாட்டி: இதற்கென்று தனியாக எந்த rule-ம் இல்லை. இந்த இடத்தில், சற்று கூடுதலாக நமது உணர்வுகளை வெளிப்படுத்தினால் நன்றாக இருக்குமே என்று தோன்றும் இடங்களில் Interjection-ஐ பயன்படுத்துகிறோம்.
(தொடரும்)
கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்.