

The knowledgeable turban!
An illiterate man once came to Mullah Nasruddin with a letter he had received and said: “Mullah Nasruddin, please read this letter to me.”
Mullah looked at the letter, but was unable to make out a single word. So he told the man: “I am sorry, but I cannot read this letter, it is incomprehensible.”
The man cried: “You should be ashamed Mullah! It is a shame on the turban you wear.” (The turban is considered a sign of education in eastern cultures.) Mullah Nasruddin took off the turban from his head and placed it on the head of the illiterate man: “There, now you wear this turban for a while. And with the knowledge it gives you, read the letter yourself!” The moral of the story is, education and knowledge do not necessarily arise from titles and status, but from the efforts invested in learning.
அறிவார்ந்த தைலப்பாகை!
ஒருமுறை எழுதப் படிக்கத் தெரியாத ஒருவர் தன்னிடம் வந்து சேர்ந்த கடிதத்துடன் முல்லா நஸ்ருதீனிடம் வந்து நின்றார். முல்லா நஸ்ருதீன், இந்தக் கடிதத்தை எனக்குப் படித்துக் காட்டுங்கள் என்று அந்த மனிதர் கூறினார்.
முல்லா கடிதத்தை பிரித்துப் படித்துப் பார்த்தார். ஆனால் அவரால் அதில் உள்ள ஒரு வார்த்தையைக் கூட புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே அந்த மனிதரிடம் மன்னிக்கவும், இந்த கடிதத்தை என்னால் படிக்க முடியாது. அது புரிந்துகொள்ள முடியாதபடி எழுதப்பட்டிருக்கிறது என்று முல்லா நஸ்ருதீன் கூறினார்.
தன்னிடம் முல்லா நஸ்ருதீன் இப்படிச் சொல்ல கேட்டு அந்த மனிதர் கத்திக்கூப்பாடு போட்டார். நீங்கள் வெட்கப்பட வேண்டும் முல்லா! நீங்கள் அணியும் தலைப்பாகைக்கு இது அவமானம் என்று முல்லாவை திட்டினார். (கிழக்கத்திய நாடுகளின் கலாச்சாரப்படி தலைப்பாகை கல்வியின் அடையாளமாகக் கருதப்படுகிறது.)
இப்போது, முல்லா நஸ்ருதீன் தன் தலையில் இருந்த தலைப்பாகையை கழற்றி அந்த எழுத்தறிவு இல்லாதவரின் தலையில் சூட்டினார். இப்போது நீங்கள் இந்த தலைப்பாகையை சிறிது நேரம் அணிந்து கொள்ளுங்கள். அது உங்களுக்குக் கொடுக்கும் அறிவைக் கொண்டு, அந்தக் கடிதத்தை நீங்களே படித்துக் கொள்ளுங்கள் என்றார் முல்லா நஸ்ருதீன்.
பட்டங்களினாலோ, அந்தஸ்தினாலோ கல்வியும் அறிவும் வந்துவிடுவதில்லை. மாறாக கற்றலில் முதலீடு செய்யப்படும் முயற்சிகளின் வழியாகத்தான் கல்வி பெற முடியும் என்பதே இந்த கதை உணர்த்தும் நீதி.
- கட்டுரையாளர்: ஆங்கிலத் துறை முன்னாள் உதவிப் பேராசிரியர்