

இசை: என்னடா வாசலை எட்டி எட்டி பார்த்துட்டு இருக்குற?
இனியன்: அப்பா சீக்கிரம் வரேன்னு (என்று) சொன்னாங்க. அதான்.
மித்ரன்: என்ன விஷயம்?
இனியன்: வரும்போது எனக்கு அட்லஸ் (Atlas) வாங்கிட்டு வரேன்னு (என்று) சொல்லியிருந்தாங்க.
மித்ரன்: உன்கிட்ட இருந்தது என்ன ஆச்சு?
இனியன்: அதை தொலைச்சிட்டேன். எங்கே தொலைச்சேன்னு (என்று) தெரியல. ரெண்டு மூணு நாளா தேடிப்பார்த்தேன்.
உமையாள்: அடடா.
பாட்டி: அதனாலதான் அப்பா புதுசு வாங்கி தரேன்னு (என்று) சொன்னாங்களா?
இனியன்: ஆமாம்.
இசை: இப்போ என் கையில இருக்கிறது என்ன?
இனியன்: இது என்னோட அட்லஸ் தானே.
மித்ரன்: அதேதான், என் புத்தகங்கள் கூட இருந்தது.
இனியன்: இப்போ தான் ஞாபகம் வருது. அன்னைக்கு ஒன்னா உக்காந்து homework பண்ணிட்டு இருந்தோமே. அப்படியே விட்டுட்டு வந்துட்டேன்னு (என்று) நினைக்கிறேன்.
பாட்டி: நல்ல பையன் நீ.
இனியன்: இப்போ என்ன பண்ண?
இசை: நீ அப்பாவுக்கு போன் பண்ணி atlasவேண்டாம்ன்னு (என்று) சொல்லிடு. இன்னும் ஆபீஸ்ல இருந்து கிளம்பியிருக்க மாட்டாங்க.
இனியன்: அதுவும் சரிதான்.
பாட்டி: இப்போது நீங்கள் பேசியதற்கு எல்லாமே that என்ற conjunction-ஐ பயன்படுத்தலாம்.
இசை : சரி பாட்டி.
பாட்டி: எங்கெல்லாம் “என்று” என்ற வார்த்தையை பயன்படுத்துகிறோமோ அங்கெல்லாம் “that” பயன்படுத்த முடியும்.
(தொடரும்)
- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்