கொஞ்சம் technique கொஞ்சம் English - 135:Conjunction - Whenever. இணையத்திற்கும் பாதுகாப்பு அவசியமா!

கொஞ்சம் technique கொஞ்சம் English - 135:Conjunction - Whenever. இணையத்திற்கும் பாதுகாப்பு அவசியமா!
Updated on
1 min read

மித்ரன்: நேற்று (பிப்ரவரி 7) safer internet day (பாதுகாப்பான இணைய நாள்) என்று செய்தி வந்திருக்கிறது. அப்படின்னா என்ன?

உமையாள்: நமக்கு தெரியாமலே நமது mobile, computer-ல் இருக்கக் கூடிய முக்கியமான தகவல்களை, வேறு ஒரு இடத்திலிருந்து எடுக்கவோ, அழிக்கவோ முடியும் தெரியுமா?

இனியன்: அது எப்படி?

இசை: Internet வழியாகத்தான்.

இனியன்: அய்யய்யோ, எனக்கு school-ல project கொடுக்கும் போதெல்லாம், internet-ல் இருந்துதான் informations எடுக்கிறேன்.

மித்ரன்: அப்படின்னா, இனிமேல் பயன்படுத்தக் கூடாதா?

இசை: அதுதான் இல்லை. Anti-virus software-ஐ பயன்படுத்தும் போதெல்லாம், நமது computer பத்திரமாக இருக்கும்.

இனியன்: நல்ல வேளை.

little technique, little English திருடன் வரும்போதெல்லாம் போலீஸ் வருவாங்க. அதே மாதிரிதான் இங்கேயும்.

உமையாள்: Exactly.

பாட்டி: Technology வளரும்போதெல்லாம், மக்களைப் பயமுறுத்தும் பிரச்சினைகளும் கூடவே வளரும்.

இசை: அப்படி பிரச்சினைகள் வரும்போதெல்லாம், அதை சரி செய்யக் கூடிய தீர்வுகளும் கூடவே கண்டுபிடிக்கப்படும்.

உமையாள்: இதை மக்களுக்கு தெரிவிக்கும் பொருட்டே, இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

பாட்டி: ஒரே நிகழ்வு மீண்டும் மீண்டும் நடக்கும்போது எந்த conjunction-ஐ பயன்படுத்தலாம் தெரியுமா?

இனியன்: Whenever தானே.

பாட்டி: Very good.

(தொடரும்)

கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in