

மித்ரன்: நேத்து எங்க வீட்டுக்கு guest வந்திருந்தாங்க.
இனியன்: அப்படியா யாரு அவங்க?
மித்ரன்: எங்க அப்பாவோட friend. அவர் வரும் போது, அவரோட குழந்தைங்க ரெண்டு பேரையும் சேர்த்து கூட்டிட்டு வந்திருந்தாங்க.
மித்ரன்: பெரியவன் பேரு பிரித்திஷ். அவனும் 4th standard தான் படிக்கிறான்.
இனியன்: அப்போ jolly தான் உனக்கு ன்னு.
மித்ரன்: பிரித்திஷ் வீட்டுக்குள்ள நுழையும் போது, டொம் ன்னு ஒரு சத்தம். என்னன்னு பார்த்தா, அவனோட குட்டி தம்பி சர்வேஷ் கீழே விழுந்து கிடக்கிறான்.
இசை: அச்சச்சோ. அப்புறம்?
மித்ரன்: குட்டி தம்பிக்கு குறும்பு அதிகம். சும்மா கீழே விழுந்து எல்லாரையும் பயமுறுத்தியிருக்கிறான்.
உமையாள்: ஆகா. நாங்களும் பயந்துட்டோம்.
மித்ரன்: பிரித்திஷ் வரும் போது, எனக்காக cake வாங்கிட்டு வந்தான். உங்களுக்கும் ஒரு box கொடுத்திருக்கிறான். இந்தாங்க எடுத்துக்கோங்க.
இனியன்: Thanks டா.
மித்ரன்: அப்புறம் நாங்க எல்லாரும் சேர்ந்து carom விளையாடினோம். carom விளையாடிட்டு இருக்கும் போதே, குட்டி தம்பிக்கு பசி எடுக்க ஆரம்பிச்சிடுச்சு.
உமையாள்: அப்படியா?
மித்ரன்: பசிக்குது பசிக்குது ன்னு அழ ஆரம்பிச்சுட்டான்.
இசை: அடடா!
மித்ரன்: அப்பா, அவனுக்காக சட்னி அரைச்சாங்க. அப்பா சட்னி அரைச்சிட்டு இருக்கும் போதே, மாமா தோசை ஊத்த ஆரம்பிச்சிட்டாங்க..
பாட்டி: Super டா. உங்க வீட்ல எல்லா ஆண்களும் சமையல் வேலையை பகிர்ந்துக்கிறாங்க.
மித்ரன்: ஆமாம் பாட்டி. சமையலறையில், அம்மா ஒரு வேலை பார்க்கும் போது, அப்பா இன்னொரு வேலையை பார்ப்பார்.
உமையாள்: இப்படி ரெண்டு பேரும் சேர்ந்து வேலை பார்க்கும்போது, வீடே மகிழ்ச்சியாக இருக்கும். கலகலன்னு இருக்கும். எங்க வீடும் இப்படி தான் இருக்கும்..
இசை: எங்க வீட்லயும் இப்படி தான்.
பாட்டி: ஒரு குறிப்பிட்ட நேரத்தில், ஒரு குறிப்பிட்ட நிகழ்வு நடப்பதை குறிக்க எந்த conjunction ஐ பயன் படுத்த வேண்டும் சொல்லுங்க?
இசை: When தானே?
பாட்டி: Very good.
When – போது (எப்போது)
(தொடரும்)
கட்டுரையாளர்:மொழித்திறன் பயிற்றுநர்