கொஞ்சம் technique கொஞ்சம் English - 131: Conjunction - Until. நான் வரும் வரை, காத்திருங்கள்

கொஞ்சம் technique கொஞ்சம் English - 131: Conjunction - Until. நான் வரும் வரை, காத்திருங்கள்
Updated on
1 min read

இனியன்: நான் வர்ற வரைக்கும் இங்கேயே இருங்க.

இசை: எங்கே போறான்?

மித்ரன்: பந்து உடைஞ்சிருச்சு. வேற பந்து எடுத்துட்டு வர போறான்.

உமையாள்: பொழுது சாய ஆரம்பிச்சிடுச்சு. நாமும் வீட்டுக்கு போய்டலாமா?

மித்ரன்: இருட்டுற வரைக்கும் விளையாடலாமே!

இசை: யாருக்கும் பசிக்கலையா?

மித்ரன்: பசி எடுக்கதான் செய்யுது. ஆனால், நல்ல பசி எடுக்குற வரைக்கும் கூட விளையாடலாம்.

உமையாள்: நல்ல பசி வரும் வரை என்னால் காத்திட்டு இருக்க முடியாது.

பாட்டி: அந்த கவலையே உங்களுக்கு வேண்டாம். உங்களுக்காக பலகாரம் நான் எடுத்துட்டு வந்திருக்கிறேன்.

இசை: Thank you பாட்டி.. பசி அடங்குறவரை சாப்பிடுவோம். அப்புறம் விளையாடலாம்.

மித்ரன்: ஐ, எவ்வளவு அதிரசம். எல்லாரும் ஒவ்வொன்றா எடுக்குறவரை என்னால் காத்திருக்க முடியாது. நான் முதலில் எடுத்துக்கிறேன்.

பாட்டி: அப்போ, எல்லாரும் இவ்வளவு பசியோடதான் விளையாடிட்டு இருந்தீங்களா.

மித்ரன்: ஆமாம் பாட்டி. வீட்டுக்கு போயாச்சுன்னா, திரும்பி வந்து விளையாட முடியாதே.

பாட்டி: சரி, உங்களுக்கு ஒரு கேள்வி. ஒரு குறிப்பிட்ட நிகழ்வு / சம்பவம் நடக்கும்வரை மற்றொரு சம்பவம்/ நிகழ்வு காத்திருக்கிறது. இதற்கு எந்த conjunction-ஐ பயன்படுத்தலாம் சொல்லுங்க.

இசை: Until தானே.

பாட்டி: Correct.

மித்ரன்: Until க்கும், tillக்கும் என்ன வித்தியாசம் பாட்டி.

பாட்டி: இரண்டுக்கும் ஒரே meaningதான். Casual ஆக பேசும் போது till -ம், formal ஆக பேசும் போது until ம் பயன்படுத்துகிறார்கள்.

(தொடரும்)

கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in