கொஞ்சம் technique கொஞ்சம் English - 130: Conjunction - however. முறுக்கும் முரண்பாடும்

கொஞ்சம் technique கொஞ்சம் English - 130: Conjunction - however. முறுக்கும் முரண்பாடும்
Updated on
1 min read

இசை: பயங்கரமா மழை பெய்யுதே. இருப்பினும் வெளியே போய் விளையாடனும் போலவும் இருக்குது.

மித்ரன்: மழையில் நனைந்தால் சளி பிடிச்சிக்கும். காய்ச்சல் வரும்.

உமையாள்: தெரியும். ஏற்கெனவே எனக்கு கொஞ்சம் சளி பிடிச்சிருக்குது. இருப்பினும், ஐஸ் கிரீம் சாப்பிடணும் போல இருக்குது.

மித்ரன்: இருக்கும், இருக்கும்.

இனியன்: எனக்கும் பல் வலி இருக்குது. இருப்பினும் முறுக்கு சாப்பிடணும் போல இருக்குது.

மித்ரன்: என்ன எல்லாரும் எதோ கிண்டலா பேசிட்டு இருக்கிறது போல தெரியுதே?

பாட்டி: நடந்து நடந்து கால் வலிக்குது, இருப்பினும் இந்த பாட்டை கேட்கும் போது dance ஆடணும் போல இருக்குது.

மித்ரன்: நான் கண்டுபிடிச்சிட்டேன். நீங்க however என்கிற conjunction பத்தி பேசிட்டு இருக்குறீங்க.

பாட்டி: Correct. இரண்டு contrast sentence-ஐ இணைக்க however-ஐ நாம் பயன் படுத்தலாம்.

உமையாள்: அதே போல, but என்கிற conjunction வரக் கூடிய இடத்தில், but -க்கு பதிலாக however ஐ- கூட பயன்படுத்தலாம்.

பாட்டி: However என்ற வார்த்தைக்கு, பின்னால் தான் கமா போடா வேண்டும். However ற்கு முன்னால் “.” (Fullstop) அல்லது “;” (Semicolon) பயன்படுத்த வேண்டும்.

(தொடரும்)

கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in