கொஞ்சம் technique கொஞ்சம் English - 129: Conjunction – In case ஒருவேளை நடந்திடுமோ?

கொஞ்சம் technique கொஞ்சம் English - 129: Conjunction – In case ஒருவேளை நடந்திடுமோ?
Updated on
1 min read

பாட்டி: எல்லாரும் கிளம்பியாச்சா?

இசை: ஆமாம் பாட்டி. ஆனால், வெளியே மேகமா இருக்குதே.

இனியன்: நான் குடையை எடுத்துக்கிட்டேன். ஒருவேளை மழை பெய்தால், நாம் நனையாமல் இருக்க இந்த குடை உதவும்.

பாட்டி: நீ என்னடா தொப்பியை கையில் வச்சிருக்கிற?

மித்ரன்: ஒரு வேளை வெயில் அடித்தால், இந்த தொப்பி என் தலையை பாதுகாக்குமே! அதுக்குதான்.

பாட்டி: ஓஹோ. இந்த பையில் என்ன இருக்குது?

உமையாள்: இதில் முழுக்க பலகாரங்கள் இருக்குது பாட்டி. ஒருவேளை நமக்கு பசிச்சா, இதை சாப்பிட்டுக்கிடலாம்.

பாட்டி: பக்கத்துல இருக்குற பூங்காவிற்கு போகலாம் ன்னு கூப்பிட்டது ஒரு குத்தமா. இப்படி எல்லாத்தையும் எடுத்து வச்சிருக்கீங்க.

இசை: நீ ஏன்டா, இவ்வளவு தாளை கையில வச்சிருக்கிற.

இனியன்: ஒருவேளை மழை வந்தால், கப்பல் செஞ்சு விளையாடலாம் ன்னு தான்.

மித்ரன்: ஒரு வேளை மழை வரலை ன்னா, விளையாடு றதுக்கு ball கூட எடுத்து வச்சிருக்கிறேன். பாருங்க.

பாட்டி: இப்படி “ஒரு வேளை,” ன்னு காரணத்தை (reason) சொல்லி, அதற்கு என்ன முன்னெச்சரிக்கை (precaution) நாம எடுக்கணும் என்பதையும் சேர்த்து சொல்லக் கூடிய conjunction என்ன தெரியுமா?

இசை: “In case” பாட்டி. அதை தெரிஞ்சு வச்சிட்டு தான், உங்க கூட விளையாடிட்டு இருக்கிறோம்.

பாட்டி: நல்ல புள்ளைங்க நீங்க.

(தொடரும்)
கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in