

பாட்டி: As soon as என்ற conjunction -க்கும் No sooner … than என்ற conjunction -க்கும் ஒரே அர்த்தம் தெரியுமா?
இசை: “No sooner … than”-ல் “no” என்று ஒரு வார்த்தை வருகிறேதே. இது “as soon as”-க்கு opposite meaning-ஐ கொடுக்காதா?
பாட்டி: அதுதான் இல்லை.
மித்ரன்: Example ஒன்று சொல்லுங்களேன்.
இனியன்: நான் வீட்டிற்கு வந்தவுடன் எனது மதிய உணவை சாப்பிட்டேன்.
உமையாள்: As soon as I reached my home, I had my lunch.
பாட்டி: இதில், “As soon as” என்பது “No sooner” ஆக மாறும்.
Main verb லிருந்து auxiliary verb-ஐ பிரித்து எடுக்க வேண்டும்.
கமா (comma) வரக் கூடிய இடத்தில் than வர வேண்டும்.
Formula
Example
இசை: No sooner did I reach my home than I had my lunch. இது சரியா?
பாட்டி: மிகவும் சரி.
மித்ரன்: இந்த method ரொம்ப easy ஆக இருக்குது பாட்டி.
(தொடரும்)
கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்