கொஞ்சம் technique கொஞ்சம் English - 127: Conjunction - Unless. இப்படியும் சொல்லலாமா!

கொஞ்சம் technique கொஞ்சம் English - 127: Conjunction - Unless. இப்படியும் சொல்லலாமா!
Updated on
1 min read

மித்ரன்: திடீர்னு class ல surprise test வச்சுட்டாங்க.

இசை: அப்படியா..

மித்ரன்: ஆமாம். New year resolution எடுத்ததில் இருந்து, தினமும் கொஞ்ச நேரம் படிக்கிறேன். அதனால பரீட்சையை சிறப்பா எழுத முடிஞ்சது.

இனியன்: நானும் தான். படிக்கலைனா, ஒண்ணுமே எழுதியிருக்க மாட்டேன்.

மித்ரன்: Class ல நிறைய பேரு திரு திரு ன்னு முழிச்சிட்டு இருந்தாங்க.

இனியன்: சில பேரு சொல்லிட்டு இருந்தாங்க, class teacher மட்டும் வரலேன்னா test நடந்திருக்காது ன்னு.

உமையாள்: பூனை கண்ணை மூடிக்கிட்டு சொல்லுச்சாம், உலகமே இருண்டு போச்சு ன்னு. அப்படி இருக்குது இது.

இனியன்: கிகிகிகி.

பாட்டி: அப்படி இல்லையென்றால், இப்படி ஆகும் ன்னு சொல்லுறோம் இல்லையா ? இதற்கு Unless என்ற conjunction ஐ நாம் பயன்படுத்தலாம்.

உமையாள்: Unless என்றால் இல்லையென்றால் என்ற அர்த்தமா?

பாட்டி: Correct. இன்னும் தெளிவாக, Unless என்பது If ற்கு எதிர்பதம் என்று சொல்ல முடியும்.

உமையாள்: Unless = “If .. not”

மித்ரன்: இது ரொம்ப easy ஆ இருக்குதே.

இசை: If.. not என்ற இரண்டு வார்த்தைகளுக்கு பதில், Unless என்ற ஒரே வார்த்தையை மட்டும் பயன்படுத்தினால் போதும்.

(தொடரும்)

- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in